இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... என்றும் குமார்..

Tuesday, December 17, 2013

பாடபொருள்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களே தயார் செய்கிறார்கள்


ஜப்பான் சீனா கனடா ரஷ்யா உட்பட 28நாடுகளில் பாடபுத்தகமே இல்லை உலகின் தலைசிறந்த கல்வியை தருகின்ற சுவிட்சர்லாந்து பின்லாந்து கியூபாவில் பாடபொருள்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களே தயார் செய்கிறார்கள்.
கியூபாவிலும் இறுதி தேர்வு என்று ஒன்றில்லை சிலி,பென்சில்வேனியா,வெனிசுலா ஆகிய நாடுகளில் பாடப்புத்தகம் தயாரிப்பதில் மாணவர்களும் பங்கேற்கின்றனர். ஆனால் இங்கே மாணவர்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் இடையே மிகப்பெரிய ஒரு இரும்பு திரை இருக்கிறது நுகர்வோர்களிடம் விற்கும் பொருளின் தரத்தை கேள்விகளை கேட்டு நிர்ணயிக்கும் நாம் கல்வியை நுகர்வு பொருளாக்கி ஆனால் நமக்கு தேவையில்லாததை வாங்கவும் வைக்கிறது கல்வி சமூகம் அந்த இரும்பு திரையை உடைக்க மாற்றுகல்வியை நோக்கி நமது சமுதாயத்தை செலுத்த அவசியம் அதை நோக்கி சிந்திக்க வைக்கும் புத்தகம் தான் ஆயிஷா நடராசன் எழுதிய இது யாருடைய வகுப்பறை(பாரதி புத்தகாலயம் 150ரூ) தொழில்புரட்சியால் உண்டான பள்ளிகூடங்கள் மற்றும் குழந்தை பருவத்திலிருந்து கல்வியின் வரலாறு, அரசியல் பாதிட்டம், கல்வி திட்டம்,ஆசிரியர் மாணவர் உறவு முறை,பெற்றோர் குழந்தை ஆசிரியர் உறவுமுறை,மாணவர்களின் உளவியல்,கல்வி சமந்தமான சட்டங்கள்,நான்கு சுவர்களை தாண்டி மாற்று கல்விமுறை பற்றிய சிந்தனையாளர்கள்,கல்வியில் சாதித்துள்ள நாடுகளின் கல்விமுறை மெக்காலேவின் Macalay minutes அறிக்கை முதல் யஷ்பால் கமிட்டி வரை பல்வேறு ஆய்வறிக்கைகளை மிக அழகான நடையில் மேற்குறிப்பிட்ட தகவல்களை தாண்டி மாற்று கல்வியை சிந்திக்க வைக்கும் ஒரு உந்து சக்தியா இந்த புத்தகம் இருக்கிறது ஒரு நாட்டின் கல்வி சமச்சீராக சென்றடைந்தால் தான் ஏற்ற தாழ்வற்ற ஒரு சமூகம் அமைய முக்கியகாரணியாக இருக்கும் ஆனால் நம்நாட்டில் இன்று நடப்பது என்ன? 
மாணவர்களை தேடிச்சென்று கல்வியை கொடுக்க வேண்டிய அரசாங்கம் EXPOநடத்தி விற்கு வழிவகைகள் செய்துகொண்டிருக்கிறது காசிருந்தால் கல்வி இல்லை கடன் வாங்கி படி என மாணவர்களை கடனாளியாக்கி அதை கல்வியில் பெரிய சாதனையை நிகழ்த்தியதை போல நிதியமைச்சர் கூறிக்கொண்டிருக்கும் போதுதான் அவர் திறந்தவைத்து வங்கியில் திருடர்களின் புகைபடங்களை போல கல்விகடன் வாங்கிய மாணவர் படம் ஒட்டும் மகத்தான கல்வி சாதனைகள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது கல்விமுறை ஒருவிதத்தில் மாணவர் பெற்றோர் ஆசிரியர்களை மும்முனை போட்டியாளர்களாக கல்விகூடங்கள் உருவாக்கி கல்விமுறை உருவாக்கிவருகிறது ஆசிரியர்களே தேவையில்லை என்றார் ரூசோ,
யாருடைய வகுப்பறை இது?, அறிவியல் தெரியும் ராமலிங்கத்தை தெரியுமா?,வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது,உள்ளேன் டீச்சர்,அவங்க வகுப்பறை நம்ம வகுப்பறை,வகுப்பறையின் சுவர்களை தகர்தெறிந்தவர்கள் என 6 கட்டுரைகளில் நம் நாட்டில் நிலவும் கல்வி முறைகளின் மீதான கேள்விகள் ஆதகங்கள் வருத்தங்கள் தீர்வுகளை தேடி கூட்டி செல்லும்முதல் நூல் மதிப்பெண்களை நோக்கி துரத்தும் வகுப்பறையில் மறுமலர்ச்சியை விரும்பும் அனைவரும் அதன் நுட்பங்களை அறிய படிக்க வேண்டிய நூல்

No comments: