இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... என்றும் குமார்..

Thursday, August 22, 2013

2014ல் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு

தற்போது 1.1.2011-க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர் -களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள -தாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின் 17.5.2011 நாளிட்ட கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம்.

தற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர் S.A.மற்றும் P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்.

SPECIAL ALLOWANCE  பற்றிய   விளக்கம் :

          இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010. 

Tuesday, August 20, 2013

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)

80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்

70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்

60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண்

50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

பட்டப் படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)

50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்

பி.எட். படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)

50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)

80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்

70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்

60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

Wednesday, August 14, 2013

தொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 20.08.13 அன்று சென்னையில் நடைபெறுகிறது

Tuesday, August 6, 2013

மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய வழங்க கோரி ஆகஸ்ட் 30ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த TNPTF அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் மருத்துவமனைகளின் பட்டியலை அங்கீகரித்து தமிழக அரசு உத்தரவு

இரட்டைப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 22க்கு ஒத்தி வைப்பு, அனைத்து தரப்பும் அன்று ஆஜர், அன்றே இறுதி தீர்ப்பு வரவும் வாய்ப்பு

           இன்று (06.08.13) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 4வது வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 22ந்தேதி வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


             வழக்கை தொடுத்த பெரும்பாலோனோர் இன்று கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். இன்று ஆஜராகாமல் உள்ளோர் அனைவரையும் வரும் 22.08.2013 விசாரணையை முடிக்க ஏதுவாக ஆஜராக கேட்டுக்கொள்ளப்பட்டது.
                இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதபதி விசாரணையை 22.8.2013 ஒத்தி வைத்து உத்தரவு. 5 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த வழக்கு வருகிற 22.8.2013 அன்று விரிவாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றே இறுதி தீர்ப்பு வர வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TNTET - 2013 - HALL TICKET PUBLISHED 

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
 
     

  
           

Dated: 06-08-2013
Chairman

Sunday, August 4, 2013

TNTET - நுழைவுச்சீட்டுகளை இணையத்திலிருந்து மட்டும் தான் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு "ஹால் டிக்கெட்' இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு,இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன.

"தேர்வர்கள், வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படாது;அனைவரும், இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்' என்று, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 6ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க வருகிற 06.08.2013 செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வழக்கில் முன்னின்று நடத்தி வரும் ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.
06.8.2013க்கு பின்னர் தள்ளி போக வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு 3% அளித்து ஊதிய நிர்ணயம் திருத்தியமைப்பது குறித்த மாதிரி படிவங்கள்

TO DOWNLOAD REVISED SELECTION / SPECIAL GRADE PAY FIXATION FORMAT CLICK HERE...