இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... என்றும் குமார்..

Tuesday, October 29, 2013

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா? இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது..  பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்! அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல,

டிட்டோ-ஜாக் கூட்டம் வருகிற 9.11.2013 அன்று சென்னையில நடைபெற உள்ளது

இதில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் 
1. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
2. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
3. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,

Wednesday, October 23, 2013

How to Entry School Profile in www.tndge.com website?

For Download Tutorial - Click Here 

For Download Tutorial - Click Here 

அரசாணை எண்.237 Dt.22.7.2013 -தேர்வுநிலை/சிறப்பு நிலைக்கு கூடுதலாக 3 % ஊதிய உயர்வு அளித்தல் பற்றிய ஓர் விளக்கம்:

பல கேள்விகள்
1. 4300 தர ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் 1.1.2006 க்கு பிறகே தேர்வுநிலை பெற்றனர்.எனவே அவர்களுக்கு 3% உயர்வு உண்டா/
2.  5400 தர ஊதியம் பெற்று வரும் தலைமை ஆசிரியர்கள் ,பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் 1.1.2006 க்கு பிறகே தேர்வுநிலை பெற்றனர்.எனவே அவர்களுக்கு 3% உயர்வு உண்டா/
3.  4300 தர ஊதியம்பெறும் ஆசிரியர்களுக்கு இல்லை என அரசாணையில் எங்காவது உள்ளதா ? பின்பு எப்படி இல்லை என்று கூறுகிறீர்கள்?
4 .1/1/2006 முதல் 31/5/2009 வரை தேர்வு நிலை /சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு மட்டுமே இவ்வாணை பொருந்தும் என்று சொல்கிறார்களே உண்மையா?

அகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை - பள்ளிகளை வகைப்படுத்துவதற்கான புதிய படிவம் மாவட்டங்களுக்கு அனுப்பி, பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு

Tuesday, October 22, 2013

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விடயங்கள்! ! !


1. பசி என்று குழந்தை சொன்னால்,உடனே உணவு கொடுங்கள்,அரட்டையிலோ, சோம்பலிலோ,வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம்,எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி,அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர் 4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!
6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சிலஇடங்களில் நடக்கிறது.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்
8. குழந்தைகள், வீட்டின் முகவரி,பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள்,வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!
10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது,வன்முறை, காதல், கொலை, களவு போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ,அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
.14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!
17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.
18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது.நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!
19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள். 20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம்.விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"
21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும்,அவர்களின் வயதுக்கேற்பபுரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல்அவர்களிடம் சொல்வது அவசியம்.
22. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ,இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
23. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழக பட்டியல்: யுஜிசி வெளியீடு

இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.இந்தியாவில், 9 மாநிலங்களில்  உள்ள அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. மொத்தம் 21 பல்கலைகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக, யுஜிசி அதன் இணையதளத்தில் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைமைகளும் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச முடிவு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 20/10/13 அன்று நாமக்கல் நகரில் நடைபெற்றது. பொதுக்குழுவில் இன்றைய இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்சினையாக உள்ள தர ஊதியம் 4200 ஆக மாற்ற கீழ்க்கண்டநடவடிக்கைகளில் செய்வது என முடிவாற்றப்பட்டது

முதலில், அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைமைகளும் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து

Thursday, October 10, 2013

தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / தொகுப்பூதியம் பணியாளர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கான 10% அகவிலைப்படி அரசாணை வெளியீடு

GO.401 FINANCE (ALLOWANCES) DEPT DATED.10.10.2013 - ALLOWANCES - DEARNESS ALLOWANCES - ENHANCED RATE OF DEARNESS ALLOWANCES FROM JULY 01, 2013 CLICK HERE...

அரசாணை எண்.401 நிதித் (படிகள்) துறை நாள்.10.10.2013 - படிகள் - அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

GO.402 FINANCE (ALLOWANCES) DEPT DATED.10.10.2013 - Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium -Ad-hoc Increase from 01.07.2013 - Orders - Issued.

அரசாணை எண்.402 நிதித் (படிகள்) துறை நாள்.10.10.2013 - திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.72013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

அரசாணை எண்.403 நிதித் (படிகள்) துறை நாள்.10.10.2013 - ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2013ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

Wednesday, October 9, 2013

தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

Tuesday, October 8, 2013

இரட்டை பட்டம் சார்பான விசாரணை மீண்டும் வருகிற புதன்கிழமை தொடர்கிறது

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்பொழுது இரட்டைப்பட்டம் சார்பாக வழக்கறிஞர் எஸ்.எஸ்.முத்துகுமரன் அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் வாதிட்டார். பின்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பாக எஸ்.வி.பீமன் அவர்கள் தனது வாதத்தை தொடர்ந்தார்.
இரட்டைப்பட்டம் சார்பாக ஏற்கெனவே வாதிட்ட வழக்கறிஞர் பிரசாத் அவர்கள் இன்று ஆஜராகாததால் வருகிற புதன்கிழமைக்கு வழக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Wednesday, October 2, 2013

அரசு பள்ளி ஆசிரியர்களின் முயற்சி இப்படித்தான் இருக்க வேண்டும்

உங்களால் நம்ப முடியுமா? ஒரு குக்கிராமத்திலிருக்கும் 

துவக்கப் பள்ளிக்குமாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். 
கல்வித்துறை உயரதிகாரிகள் வந்துபோகின்றனர். அண்ணா 
பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வந்துசெல்கிறார். ஒரு 
தேசியக்கட்சியின் மாநிலச் செயலாளர் பள்ளிக்கு 
வந்துசெல்கிறார். விஜய் தொலைக்காட்சி 2013 புத்தாண்டில் 
தன் முகங்கள் நிகழ்ச்சியில் தமிழகத்தில் தலைசிறந்த 
அரசுப்பள்ளி என தேர்வு செய்து அறிவிக்கின்றது. ஆந்திராவில் 
துணை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் தமிழக IAS அதிகாரி

 தனது பகுதியிலும் இதேபோல் செயல்படுத்த விரும்புவதாக
 தொலைபேசுகிறார். பக்கத்து மாநிலங்களிலிருந்து
ஒரு சுற்றுலா போல வந்துபோகின்றனர்.
…….. இங்கே எழுதப்பட்டது ஒருசில மட்டுமேஎழுத மறந்தது ஏராளம்.