இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... என்றும் குமார்..

Saturday, December 21, 2013

உ. சகாயம்

உ. சகாயம்
Sahyamias.JPG
பிறப்பு புதுக்கோட்டை, தமிழ்நாடு
தொழில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி
உ. சகாயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தவர். தாம் பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டவர்.

Friday, December 20, 2013

டிசம்பர் 2013 -துறைத்தேர்வுக்கான(Departmental Exam ) நுழைவுச்சீட்டு வெளியீடு

1947=2014, 67 ஆண்டுகளுக்கு பின் ஒரே மாதிரி காலண்டர்

சில சமயங்களில் எப்போதாவது சில அதிசயங்கள் நிகழும். அப்படிப்பட்ட ஓர் அதிசயம் வருகிற 2014ம் ஆண்டில் நிகழ்கிறது. அதாவது 1947ம் ஆண்டு காலண்டர் போலவே, 2014ம் ஆண்டின் காலண்டரும் அமைகிறது. 1947ம் ஆண்டு புதன்கிழமை பிறந்தது. அதேபோல் இந்த ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது.
மேலும் 1947ம் ஆண்டைப் போலவே 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டு உள்ளது.

பள்ளிக்கல்வி - 2013ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது - விருது பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்களை அனுப்பக் கோருதல் மற்றும் தேர்வுக் குழு அமைத்து உத்தரவு

DSE - 2013 NATIONAL BEST TEACHER AWARD - TO APPOINT SELECTION COMMITTEE & SUBMIT 

PROPOSAL & APPLICATION FORMAT REG PROC CLICK HERE...

Thursday, December 19, 2013

23.12.13 அல்லது 02.01.14 ஆகிய தேதியில் CL வைத்திருந்தால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.


பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான கடைசி வேளை நாள் December 23 தான்.
எனவே பள்ளியின் கடைசி வேளைநாள் அன்று தற்செயல் விடுப்பு எடுக்க முடியாதே..? என்ன செய்வது என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில்ஏற்பட்டுள்ளது....
விளக்கம்:

* இரண்டாம் பருவ விடுமுறை 9 நாட்கள் மட்டுமே(24.12.13 to 01.01.14).

* பள்ளிக்கு வருகை தராமல் (விடுப்பு+விடுமுறை) அதிகபட்சம் 10 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்(கோடை விடுமுறை தவிர)

* 11வது நாள் பணிக்கு திரும்பாவிட்டால் மட்டுமே விடுப்பின் வகை மாற்றப்படும்(EL).

எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு.


       இந்திராகாந்தி தேசிய நிறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2014ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் சேர்க்கை பெற அழைப்பு விடுத்துள்ளது. 
        எம்.பில், (எஜூகேஷன், எகனாமிக்ஸ, சோசியலாஜி, அரசியல்அறிவியல்)பி.எச்டி., (மெக்கானிக்கல், வராலாறு, பொருளாதாரம், சோசியாலஜி, நூலக மற்றும் தொழில்நுட்ப அறிவியல், அந்திரோபாலஜி, அரசியல் அறிவியல், பைன் ஆர்ட்ஸ்) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பிப்.,23ம் தேதி நாடு முழுவதும் உள்ள மையங்களில் தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பிக்கத் தேவையான தகுதி, தேர்வு முறை குறித்த விவரங்களுக்கு கையேட்டில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு The Director, Research Unit, Block-6, Room -18, IGNOU, Maidan Garhi, New Delhi - 110068. என்ற முகவரியின் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

windows 7 & 8- ஐ தமிழில் மாற்ற வேண்டுமா?



          கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.

           இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.

            அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

Wednesday, December 18, 2013

எம்.பில்., படிப்புக்கு விண்ணப்பிக்க தயாரா?

          ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், எம்.பில் படிப்பு மற்றும் ஒருங்கிணைந்த எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து அழைப்பு விடுத்துள்ளது. எம்.பில்., படிப்பில் சேர முதுகலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' 7667100100.சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்


           லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து’ என்ற  இயக்கம்.
           இந்த அமைப்புக்கான தொலைபேசி சேவை தொடக்க விழா சென்னை, தி.நகரில் நடந்தது.

2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி

அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்கள் விவரம் வருமாறு:

பள்ளிக்கல்வித்துறையில்

PG. -981
BT TAMIL. -115
BT OTHERS -417
PET -99
ஓவிய ஆசிரியர் -57
இசை ஆசிரியர் -31
தையல் ஆசிரியர் -37

தொடக்கக் கல்வித்துறையில்

கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள் "சூப்பர்" 

தமிழகத்துக்கு 3 ஆம் இடம்

கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தர வரிசையில், லட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு முறையே, முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன.

TNTET WEIGHTAGE FOR SECONDARY GRADE TEACHERS

a) There shall be 100 marks in total as full marks.
b)The computation of 100 marks will be in the following manner.
i) +2 15 marks
ii) D.T.ed/ D.E.Ed: 25 marks
iii) TET: 60marks
c) Marks shall be given for item i,ii,iii of clause (b) in the manner mentioned here under.
FOR +2

Tuesday, December 17, 2013

8 ஆம் வகுப்பு திறனாய்வுத்தேர்வு

(NMMS) தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்- விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வது குறித்த விவரங்கள் மற்றும் படிவங்கள்...NMMS FORMS AND INSTRUCTION FROM DGE REGARDING 2013-2014

பாடபொருள்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களே தயார் செய்கிறார்கள்


ஜப்பான் சீனா கனடா ரஷ்யா உட்பட 28நாடுகளில் பாடபுத்தகமே இல்லை உலகின் தலைசிறந்த கல்வியை தருகின்ற சுவிட்சர்லாந்து பின்லாந்து கியூபாவில் பாடபொருள்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களே தயார் செய்கிறார்கள்.
கியூபாவிலும் இறுதி தேர்வு என்று ஒன்றில்லை சிலி,பென்சில்வேனியா,வெனிசுலா ஆகிய நாடுகளில் பாடப்புத்தகம் தயாரிப்பதில் மாணவர்களும் பங்கேற்கின்றனர். ஆனால் இங்கே மாணவர்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் இடையே மிகப்பெரிய ஒரு இரும்பு திரை இருக்கிறது நுகர்வோர்களிடம் விற்கும் பொருளின் தரத்தை கேள்விகளை கேட்டு நிர்ணயிக்கும் நாம் கல்வியை நுகர்வு பொருளாக்கி ஆனால் நமக்கு தேவையில்லாததை வாங்கவும் வைக்கிறது கல்வி சமூகம் அந்த இரும்பு திரையை உடைக்க மாற்றுகல்வியை நோக்கி நமது சமுதாயத்தை செலுத்த அவசியம் அதை நோக்கி சிந்திக்க வைக்கும் புத்தகம் தான் ஆயிஷா நடராசன் எழுதிய இது யாருடைய வகுப்பறை(பாரதி புத்தகாலயம் 150ரூ) தொழில்புரட்சியால் உண்டான பள்ளிகூடங்கள் மற்றும் குழந்தை பருவத்திலிருந்து கல்வியின் வரலாறு, அரசியல் பாதிட்டம், கல்வி திட்டம்,ஆசிரியர் மாணவர் உறவு முறை,பெற்றோர் குழந்தை ஆசிரியர் உறவுமுறை,மாணவர்களின் உளவியல்,கல்வி சமந்தமான சட்டங்கள்,நான்கு சுவர்களை தாண்டி மாற்று கல்விமுறை பற்றிய சிந்தனையாளர்கள்,கல்வியில் சாதித்துள்ள நாடுகளின் கல்விமுறை மெக்காலேவின் Macalay minutes அறிக்கை முதல் யஷ்பால் கமிட்டி வரை பல்வேறு ஆய்வறிக்கைகளை மிக அழகான நடையில் மேற்குறிப்பிட்ட தகவல்களை தாண்டி மாற்று கல்வியை சிந்திக்க வைக்கும் ஒரு உந்து சக்தியா இந்த புத்தகம் இருக்கிறது ஒரு நாட்டின் கல்வி சமச்சீராக சென்றடைந்தால் தான் ஏற்ற தாழ்வற்ற ஒரு சமூகம் அமைய முக்கியகாரணியாக இருக்கும் ஆனால் நம்நாட்டில் இன்று நடப்பது என்ன? 
மாணவர்களை தேடிச்சென்று கல்வியை கொடுக்க வேண்டிய அரசாங்கம் EXPOநடத்தி விற்கு வழிவகைகள் செய்துகொண்டிருக்கிறது காசிருந்தால் கல்வி இல்லை கடன் வாங்கி படி என மாணவர்களை கடனாளியாக்கி அதை கல்வியில் பெரிய சாதனையை நிகழ்த்தியதை போல நிதியமைச்சர் கூறிக்கொண்டிருக்கும் போதுதான் அவர் திறந்தவைத்து வங்கியில் திருடர்களின் புகைபடங்களை போல கல்விகடன் வாங்கிய மாணவர் படம் ஒட்டும் மகத்தான கல்வி சாதனைகள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது கல்விமுறை ஒருவிதத்தில் மாணவர் பெற்றோர் ஆசிரியர்களை மும்முனை போட்டியாளர்களாக கல்விகூடங்கள் உருவாக்கி கல்விமுறை உருவாக்கிவருகிறது ஆசிரியர்களே தேவையில்லை என்றார் ரூசோ,
யாருடைய வகுப்பறை இது?, அறிவியல் தெரியும் ராமலிங்கத்தை தெரியுமா?,வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது,உள்ளேன் டீச்சர்,அவங்க வகுப்பறை நம்ம வகுப்பறை,வகுப்பறையின் சுவர்களை தகர்தெறிந்தவர்கள் என 6 கட்டுரைகளில் நம் நாட்டில் நிலவும் கல்வி முறைகளின் மீதான கேள்விகள் ஆதகங்கள் வருத்தங்கள் தீர்வுகளை தேடி கூட்டி செல்லும்முதல் நூல் மதிப்பெண்களை நோக்கி துரத்தும் வகுப்பறையில் மறுமலர்ச்சியை விரும்பும் அனைவரும் அதன் நுட்பங்களை அறிய படிக்க வேண்டிய நூல்

Sunday, December 15, 2013

கூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: நடப்பாண்டில் புது ஆசிரியர்கள் 18,500 ஆக உயர்வு

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பிப்.22-ல் தேசிய திறனறி படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு: டிச.16 முதல் 20 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்

தேசிய திறனறி மற்றும் படிப்பு உதவித் தொகைக்கான (என்.எம்.எம்.எஸ்.) தேர்வு வரும் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

Saturday, December 7, 2013

RTI-உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்

 

பள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

Useful SMS Services for Teachers
இன்றைய சூழலில், எல்லாத் துறைப் பணியாளர்களும் தங்கள் துறைசார்ந்த அவ்வப்போதைய தகவல்களை, அவ்வப்போதே தெரிந்து கொண்டு தங்களை அப்டேட் செய்து கொள்வது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை அவ்வப்போது புதிய அரசாணைகளும், தினந்தோறும் ஆசிரியர்களது பணிசார்ந்த இயக்குநர்களின் செயல்முறைகளும், தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வரும் கற்பித்தல் முறைகள் மற்றும் அது சார்ந்த செய்திகளும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

+2 பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு ஒரு அவசர தகவல்


Shree Vijayalakshmi Charitable Trust – Details :
Shree Vijayalakshmi Charitable Trust is providing scholarship for Merit holders of SSLC, HSC, DIPLOMA & UG for their higher education every year.
 


 வேடந்தாங்கல்



Shree Vijayalakshmi Charitable Trust – Details :
Shree Vijayalakshmi Charitable Trust is providing scholarship for Merit holders of SSLC, HSC, DIPLOMA & UG for their higher education every year.

This Scholarship only Applicable for the Students belongs to Coimbatore Division. The Students having the marks of 90% or more than 90% are eligible for this benefit.

Eligible Marks for 2011 :

For 12th Students :

Govt. Schools - 960/1200
Govt. Aided - 1080/1200
Matriculation - 1140/1200


For Diploma Students :

The student should obtained above 90% in their every Semester.

Scholarship Details:

Professional Courses – 25,000
Non – Professinal Courses – 12,500

Certificates (should be provided ) :

Ration Card Xerox
SSLC mark Sheet
HSC Mark Sheet
Diploma Mark Sheet
College Allotment Order.



CONTACT DETAILS :

M/s.Shree Vijayalakshmi Charitable Trust,
Trustee Mr.A.Senthil Kumar,
No.107-A Sen Gupta Street,
Ram Nagar,
Coimbatore-641 009.


இணையதள முகவரி : http://www.papainindia.com/

தகவல் பலரையும் சென்றடைய உதவி செய்யுங்கள் உறவுகளே...

Friday, December 6, 2013

தற்செயல் விடுப்பு விதிகள்

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10-க்கு மேற்பட்ட அந்த நாளையும்விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.

4. மத விடுப்புடன் சேர்த்து தற்செயல்விடுப்பு எடுக்கலாம்.

5. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).

6. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும்.  (அவி. இணைப்பு VI )

7. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82-4 ப.ம.சீ துறை நாள்.17.1.83)

8. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

9. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

* 21 நாட்கள் ML போட்டா ஒரு நாள் EL கழிக்கப்படும்.


* வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600  
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250  
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500 
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100  
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000  
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500. 
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000 

8. சென்னைப் பல்கலைக் கழகம்- துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.  
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500  
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500  
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500 
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250  
13. Tamilnau Teacher Education University -350.  
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.   
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.
மேலும் விடுப்பட்ட அல்லது அந்தந்த பல்கழைக்கழகத்தில் உண்மை தன்மை சான்று பெற்றவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும்.