இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... என்றும் குமார்..

Thursday, July 18, 2013

இன்ஸ்பயர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் "இன்ஸ்பயர்" விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக, "இன்ஸ்பயர்" புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதை வழங்குகிறது.
 
இதை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பொறுப்பேற்று நடத்துகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவரை, ஒவ்வொரு வகுப்பில் இருந்தும், தலைமை ஆசிரியர் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். புத்தாக்க அறிவியல் விருதானது, ஒரு பள்ளிக்கு ஒரு மாணவருக்கு மட்டுமே வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தலைமை ஆசிரியர், உதவி கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக்., கல்வி ஆய்வாளர்கள் மூலம் அனுப்ப வேண்டும். திட்டத்தில் பதிவு பெறாத பள்ளிகளுக்கு, இந்த ஆண்டு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அனைத்தும், ஜூலை 31க்கு முன்னதாக அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவருக்கு 5 ஆயிரம் ரூபாய், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையால் வழங்கப்படும். இத்தொகையை அறிவியல் மாதிரிகளுக்கு செலவிட்டு, அதன் படைப்புகளை, மாவட்ட அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் இடம்பெற செய்ய வேண்டும்.

No comments: