இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... என்றும் குமார்..

Thursday, May 23, 2013

TET -2013 - தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை 
> ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
தேர்வு கட்டணம் 
> ஒவ்வொரு தாளுக்கும் ரூ-500
> எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ-250
> மாற்றுதிறனாளிகளுக்கு ரூ-250
> விண்ணப்பத்துடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்
> பாரத் ஸ்டேட் வங்கி,கனரா வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில் பணம் செலுத்தலாம்,
> டி.ஆர்.பி நகல் என குறிப்பிடப்பட்ட சலான் விண்ணப்பத்துடன்
இணைத்து    வழங்கப்படவேண்டும்
> O.M.R எனப்படும் விண்ணப்பத்தில் மட்டுமே கோரப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்
> பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் 01.07.2013 மாலை 5.30 மணிக்குள்ளாக நேரில் சமர்பிக்கப்பட வேண்டும்.
> பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதற்கான ஒப்புகை கட்டாயம் பெற அறிவிக்கப்பட்டுள்ளது.
> ஆன்லைன்,தபால்,பேக்ஸ்,கூரியர் போன்ற வழிகளிலும்,ஜெராக்ஸ் நகலில் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் (டி ஆர் பி மையம் அல்லது வேறு அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்டால்) நிராகரிக்கப்படும்.

தகுதிகள்

PAPER-2
=> B.Ed with B.A, B.Sc , B.lit
=> B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=> 10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை=> தற்போது தனியார் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்- 23/8/2010 அன்றோ அதற்கு பிறகு நியமன ஆனண பெற்றிருப்பின் தேர்வு எழுதி கட்டாயம் 5 ஆண்டுக்குள் தேற வேண்டும்.
=> தற்போது தேர்வில் வெற்றிபெறுவோர் அனைவருக்கும் 7 ஆண்டுகள் செல்லத்தக்க ஆசிரியர் தகுதிசான்று வழங்கப்படும்.
=> தகுதிசான்று பெற்றவர்களுக்கு தனியாக வெயிட்டேஜ் (அரசு ஆணையின் படி)அடிப்படையில் பணிஆணைகள், இடஓதிக்கீடு மற்றும் காலிப்பணியிடத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.
=> D.T.Ed., தகுதிபெற்றோர் தாள்-1,, B.Ed., தகுதிபெற்றோர் தாள்-2,க்குண்டான தேர்வுகள் எழுதலாம்,
=> இரண்டு தாள்களும் எழுத தகுதி பெற்றோர் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனி விண்ணப்பங்களில் விண்ணப்பித்து, ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்தி தேர்வுகள் எழுத வேண்டும்.


No comments: