அனைவரையும் கலங்க வைத்த சச்சினின் உருக்கமான பேச்சு
கண்ணீருடன் விடை பெற்ற சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்...

மும்பை: தனது 24 ஆண்டுகால கிரிக்கெட்
வாழ்க்கையை முடித்த சச்சின், வான்கடே மைதானத்தில் கடைசி முறை பேசியது அனைவரின் கண்களையும் குளம்
ஆக்கியது.
இதுவரை எந்த வீரரும் இப்படி பேச்சை பேசியதில்லை. அவருடைய இன்றைய பேச்சு, அவர் மீண்டும்
அணியில் விளையாட மாட்டார் என ஏங்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சச்சின்
பேசியது பின்வருமாறு: ' இந்த தருணத்தில் என் அப்பா இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. அவருக்கு
தான் என் முதல் நன்றி, 1999ஆம் ஆண்டு உலககோப்பையின் அவரது மறைவு செய்தி என்னை அதிர வைத்தது.
அவர் எப்போதும் என்னை விட்டு கொடுக்க மாட்டார். எதற்கும் உன் லட்சியத்தை விட்டு
கொடுக்காதே என்று என்னிடம் கூறுவார். அவரை இன்று ரொம் மிஸ் பண்ணுறேன்.
அம்மாவின் பிரார்த்தனை
என் அம்மாவின் பொறுமைக்கு நான் அடிமை, என்னை இன்று வரை
ஒரு குழந்தை போல தான் அவர் நினைத்து வருகிறார். எப்போது நான் ஆரோக்கியமாக இருக்க
வேண்டும் என்று தான் அவர் நினைப்பார். என் அம்மாவின் பிரார்த்தனை தான் என்னை இந்த
அளவிற்கு கொண்டு வந்துள்ளது.
சகோதரி பரிசாக கொடுத்த பேட்
என்னுடைய அங்கிள், ஆண்டிக்கும்
இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் ஊட்டிய உணவு தான் எனக்கு
கிரிக்கெட் விளையாட தேவையான பலத்தை கொடுத்தது. என்னுடைய சகோதரர்களுக்கும் நன்றி, அவர்கள் கொடுத்த
ஊக்கம் தான் எனக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. என்னுடைய சகோதரி சவீதாவை என்னால்
மறக்க முடியாது, நான் முதன் முதலாக விளையாடிய கிரிக்கெட் பேட் அவர் கொடுத்த பரிசு
தான்.
வாழ்க்கையின் திருப்புமுனை
என்னுடைய கோச் சேகர் சாரை சந்தித்தது
தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை, இதுவரை ஒரு தடவை கூட நீ சிறப்பாக
விளையாடினாய் என்று அவர் என்னிடம் கூறியதில்லை. அதுதான் மேலும் நான் சிறப்பாக
விளையாட ஊக்கம் தந்தது.
என்னுடைய பெஸ்ட் பாட்னர்ஷிப் அஞ்சலி
தான்
என் வாழ்க்கையின் மிக அழகான தருணம்
என்றால் அது, நான் அஞ்சலி திருமணம் செய்தது தான். அவருடைய ஆதரவு இல்லாமல் நான்
எந்த ஒரு இமாலய இலக்கையும் எட்ட முடியாது. அவர் தான் என்னுடைய பெஸ்ட் பாட்னர்ஷிப்.
குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.. கிரிக்கெட்டில் நீ சாதிக்க வேண்டும்
என்று ஊக்கம் கொடுத்த அவர் தான்.
விலையில்லா வைரங்கள் என் குழந்தைகள்
என்னுடைய விலையில்லா இரு வைரங்கள்
என்றால் அது என்னுடைய குழந்தைகள் தான்.. இருவரின் விழாக்களில் நான் கலந்து
கொண்டேதில்லை அவர்களது பள்ளி விழாவாக இருக்கட்டும், ஆண்டு விழா இருக்கட்டும் நான் கலந்து
கொண்டேதில்லை இதுவரை கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய நான், இனி உங்களுக்காக
மட்டுமே வாழ போகிறேன் (அவரது குழந்தைகளை பார்த்து).
நண்பர்கள்..
என்னுடைய நண்பர்களை மறக்கவே முடியாது..
நான் காயமடைந்த போது என் கிரிக்கெட் வாழக்கை முடிந்தது என்று தான் நினைத்தேன்.
ஆனால் அவர்கள் இனி தான் உன் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பம் என்று கூறி எனக்கு ஊக்கம்
கொடுத்தார்கள்.
பிசிசிஐ-க்கு நன்றி
பிசிசிஐ-க்கு என் நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன். என்னால் பிசிசிஐ வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரசிகர்களின் அன்பிற்கு நான் தலை
வணங்குகிறேன்
எல்லாவற்றிக்கும் மேலாக ரசிகர்கள்..
நீங்கள் சச்சின்.. சச்சின்.. சச்சின்.. என்று நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியது
இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. எனக்காக நிறைய ரசிகர்கள்
விரதம் இருந்துள்ளனர், பிரார்த்தனை செய்துள்ளனர் அவர்களின் இந்த அன்பிற்கு நான் தலை
வணங்குகிறேன். மீடியாவிற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆல் தி பெஸ்ட் டோனி அன் கோ
கங்குலி, டிராவிட், லட்சுமணன்
ஆகியோருடன் விளையாடிய தருணம் மறக்க முடியாது.. தற்போது இந்திய அணியில்
இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
நாட்டுக்கு நீங்கள் பெருமை தேடி தர வேண்டும்.. உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது..
நாட்டுக்கு தொடர்ந்து சேவை செய்யுங்கள்..
நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்
ஆல் தி பெஸ்ட்.. எல்லாருக்கும் என் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்' என்று கூறினார்.
No comments:
Post a Comment