இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... என்றும் குமார்..

Wednesday, July 31, 2013

CCE முதல் பருவம் - 2013 - 2014 - STD I TO STD VIII - வாராந்திர பாடதிட்டம் (புதிய பாடங்களின் படி)




இதுமட்டுமின்றி கீழ்க்கண்டவைகள் பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் - 2013-2014ஆம் ஆண்டிற்கான எம்.பில்., பகுதி நேரம் / முழு நேரம் சேர்க்கை அறிவிப்பு

இரட்டைப்பட்டம் வழக்கு - நீதிமன்ற விசாரணை தாமதம் ஏன்?

இன்று வரவிருந்த இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அனைத்து பதவி உயர்வு ஆசிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கு கால தாமதம் ஆவதற்கு பல காரணங்கள் உண்டு. இவ்வழக்கில் வாதாட இருக்கும் மூத்த வழக்குரைஞர்களுக்கு போதிய
நேரமின்மையால், விசாரணை தள்ளி போகிறது. எனவே புதன் அல்லது வியாழன் வழக்கு விசாரணைக்கு வருவதற்கான சூழல் நிலவுகிறது. விசாரணை வந்தால் ஒரிரு நாட்களில் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வெளியாகக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்தப் படிப்பை முடித்தால் பி.எட். படிப்பில் சேர முடியும்?


              தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

          இந்தக் கல்வி ஆண்டில் (2013-2014) எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

            அதன்படி, தமிழ், உருது, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டப் படிப்பு முடித்தவர்களும், பொருளாதாரம், மனையியல், வணிகவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிப்பில் சேர முடியும்.

              இவர்கள் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு பிளஸ் 2 படித்து பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட். படிக்க விண்ணப்பிக்க முடியாது.

               குறிப்பிட்ட 3 ஆண்டு பட்டப் படிப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு கூடுதலாக ஒரே ஆண்டில் இன்னொரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் (அடிஷனல் டிகிரி), அந்தப் பாடத்தில் பி.எட். படிப்பில் சேர முடியாது. 4 ஆண்டுகளில் இரட்டைப் பட்டப் படிப்பு முடித்தவர்களும் சேர முடியாது. ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள், பி.எட். படிப்பில் சேரத் தகுதியுடையவர்கள்.

             ஆனால், அவர்களின் முதுநிலைப் பட்டப் படிப்பு மதிப்பெண்கள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இணையான படிப்புகள்:   
                பயன்பாட்டு இயற்பியல், புவி-இயற்பியல், உயிரி- இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றவர்கள், பி.எஸ்சி. இயற்பியல் படிப்பின் கீழும், பயன்பாட்டு கணிதம் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. கணிதம் படிப்பின் கீழும், உயிரி தொழில்நுட்பம், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், சுற்றுச்சூழலியல், நுண்ணுயிரியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், பயன்பாட்டு புவியியல் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள், இளநிலை புவியியல் படிப்பின் கீழும், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு பற்றிய பாடத்தில் பட்டம் பெற்றவர்கள், கணினி அறிவியல் படிப்பின் கீழும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண்கள்
             பொருளாதாரம், வணிகவியல், மனையியல், அரசியல் அறிவியல், சமூக அறிவியல், தத்துவம், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள், பி.எட். படிக்க வேண்டுமானால், முதுநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பைத் தகுதியாகக் கொண்ட படிப்புகளின்கீழ் பி.எட். படிப்பில் சேர விரும்புவோர், குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறாமல் முதுநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும், பி.எட். படிக்க விண்ணப்பிக்க முடியும்.

           குறைந்தபட்ச மதிப்பெண் நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் முதுநிலை பட்டதாரிகள், மனையியல் படிப்பின்கீழ் பி.எட். படிப்பில் சேரலாம். இளநிலை பட்டப் படிப்பில் முதல் பிரிவில் தமிழைப் படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போர், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தமிழ் மொழிப்புலமை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

                பி.எட். படிப்பில் சேருவதற்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 43 சதவீதமும், ஆதிதிராவிடர்களுக்கு 40 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை
               இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும். உயர் கல்வித் தகுதியுடையோருக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

                   முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்திருந்தால் 4 மதிப்பெண்களும், எம்.பில். பட்டப் படிப்பு முடித்திருந்தால் 6 மதிப்பெண்களும்,  பிஎச்.டி. பட்டம் பெற்றிருந்தால் 6 மதிப்பெண்களும் கூடுதல் மதிப்பெண்களாக வழங்கப்படும். அத்துடன் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. (பி அல்லது சி சான்றிதழ்) பெற்றவர்களுக்கும், விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கும் மேலும் கூடுதலாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

                       மாணவர் சேர்க்கையின்போது அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு பின்பற்றப்படும். பி.எட். படிப்புகளில் அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: புதிய தலைமுறை

Tuesday, July 30, 2013

G.O.No.237 Dt.22.7.2013 - Grant of One Additional Increment of 3 % பற்றிய ஓர் விளக்கம்


          நம் நண்பர்கள் தொடர்ந்து நம்மிடம் இது குறித்து கேட்டுவருவதால் இதுபற்றிய ஓர் விளக்கத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

          அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். 

           அரசாணையின் முதல் பத்தியில் முந்தைய அரசானை 234 பற்றி கூறப்பட்டுள்ளது.

          இரண்டாவது பத்தியில் சங்கங்களின் கோரிக்கை பற்றியும் குறைதீர்க்கும் பிரிவின் முடிவு பற்றியும் கூறப்பட்டுள்ளது. 

         பத்தி 3 இல் 1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Revised scales of pay - இல் selection grade/special grade நிலையை அடையும் போது an additional increment benefit (3% + 3%) பெற அரசு வகை உத்தரவிட்டுள்ளது. 

நமது விளக்கம்:

           31.12.2005 - இன் போது பணியில் இருந்தவர்கள் 1.1.2006 இல் புதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்திருப்பார்கள். (தொகுப்பூதியதாரர்கள் 1.6.2006 இல் )

          1.1.2006 அன்று தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள் 5200 -20200 +G.P.2800 லும், தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 9300 விகிதத்தில் G.P.4300 லும் வைக்கப்பட்டிருப்பர்.

               இவ்வாறாக 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் செய்யப்பட்ட ஊதிய நிர்ணயத்தை தொடர்ந்து 2800 தர ஊதியத்தில் உள்ள தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள், தேர்வுநிலை அடையும்போது தற்போது கூடுதலாக 3% INCREMENT பெற்று கொள்ளலாம். உதாரணமாக 2800 தர ஊதியத்தில் உள்ள ஒருவர் 2008 ஆம் ஆண்டு தேர்வுநிலையை அடைந்திருந்தால் அப்போது 3% INCREMENT பெற்றிருப்பார். அவர் தற்போது கூடுதலாக 3% INCREMENT சேர்த்து கணக்கிட்டுகொள்ளலாம். நிலுவைத்தொகை கிடையாது. பணப்பயன் 1.4.2013 முதல் பெறலாம்.

             இதைபோல 1.1.2006 இல் தேர்வுநிலை பெற்று 9300 ஊதிய விகிதத்தில் 4300 தர ஊதியத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டவர்கள், அவர்கள் சிறப்புநிலை அடையும்போது கூடுதலாக 3% INCREMENT பெற்றுகொள்ளலாம். 

           தொகுப்பூதியதாரர்களும் மற்றும் அதற்க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களும் தேர்வுநிலை அடையும்போது 3% + 3% INCREMENT பெற்றுகொள்ளலாம்.

                சுருக்கமாக சொன்னால் REVISED SCALES OF PAY இல் தேர்வுநிலை/சிறப்புநிலை பெறுபவர்கள் 3% + 3% INCREMENT பெறலாம். 

                OPTION அளித்து தேர்வு நிலை பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்:

           OPTION அளித்து தேர்வுநிலை ஊதிய நிர்ணயமான 9300 + G.P. 4300 இல் ஊதியம் நிர்ணயம் செய்துகொண்டவர்கள் சிலர் நாங்களும் 1.1.2006 இக்கு பின்னர்தான் தேர்வுநிலை பெற்றோம் எனவே எங்களுக்கும் கூடுதலாக 3% உண்டா என்று கேட்கின்றனர். இல்லை என்றால் சங்கடப்படுகின்றனர். எனவே விளக்கம் கூற விரும்புகிறோம்.

                  உதாரணமாக 1.1.2008 இல் தேர்வுநிலை பெற்றவர்கள் 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது 5200 - 20200 + 2800 தான் பெற இயலும். எனவே அவர்1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.1.2008 வரை முந்தைய அதாவது பழைய ஊதிய விகிதத்திலேயே இருந்துவிட்டு 1.1.2008 இல் புதிய ஊதிய விகிதத்தில் தங்களது ஊதியத்தை நிர்ணயம் செய்துகொண்டிருப்பார். 

               இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் OPTION அளித்தவர்கள் பழைய ஊதிய விகிதத்தில் தான் தேர்வுநிலை பெற்று, பின்னர் புதிய ஊதியத்திற்கு வருகின்றனர். இவர்கள் அடுத்ததாக சிறப்புநிலை பெறும்போதுதான் கூடுதலாக இந்த 3% பெற இயலும்.

Saturday, July 27, 2013

"OPTION" வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் "RE-OPTION" அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை எண்.240 நாள்.22.07.2013ன் படி "RE-OPTION" வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது 1.1.2006 முதல் 31.5.2009குள்  இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.

Friday, July 26, 2013

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இரட்டைப்பட்ம் வழக்கு வருகிற திங்கட்கிழமை (29.7.13) விசாரணைக்கு வரும் என இவ்வழக்கை எடுத்து நடத்தும் தோழர்களில் ஒருவரான திரு.கலியமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடியுள்ளவர்களுக்காவது நீதி கிடைக்க கேட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 237 நாள்.22.07.2013ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு 01.01.2006 தேதி முதல் நடைமுறைப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது(அதாவது 3% + 3%). பணப்பலன்   01.04.2013 முதல் வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது (Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013).

01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, மாறாக அவர்களுக்கு 3% ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது 01.01.2006 முதல் நடைமுறைப்படுத்தி இந்த ஆணை அமுலுக்கு வருவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலன் பெறுவர்.

Thursday, July 25, 2013

மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.


 >இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
>ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு - தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை. (Notional Effect from 01.01.2006, Monetary Benefit from 01.04.2013)

>மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.


Click Here 4 Download GO -1st SPELL 


Click Here 4 Download GO -2nd SPELL

Tuesday, July 23, 2013

மாணவ, மாணவியருக்கு சுதந்திர தினத்தன்று சீருடை கிடைக்கும்

           சுதந்திர தினத்தன்று, அரசு பள்ளி மற்றும் விடுதி மாணவ, மாணவியர், புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, அவர்களுக்கு இரண்டாவது, "செட்" சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.
             தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில், மதியம் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, அரசு சார்பில், இலவச சீருடை வழங்கப்படுகிறது. அதேபோல், அரசு விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை வழங்கப்படுகிறது.
           இவர்கள் அனைவருக்கும், நான்கு, "செட்" சீருடை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு, நடப்பாண்டு, ஒரு, "செட்" சீருடை வழங்கப்பட்டு உள்ளது.
             இவர்களில், 13 லட்சம் மாணவியருக்கு பாவாடை, 10 லட்சம் மாணவியருக்கு சுடிதார், 25 லட்சம் மாணவர்களுக்கு டவுசர் மற்றும் பேன்ட் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு சீருடை தைப்பதற்கு, 1.45 கோடி மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டு உள்ளது.
             முதல்வர் அறிவித்தபடி, நான்கு, "செட்" சீருடைகளை, நான்கு தவணைகளாக வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதன்படி, பள்ளி துவங்கியதும், முதல், "செட்" சீருடை வழங்கப்பட்டது. அடுத்து சுதந்திர தினத்தன்று, மாணவ, மாணவியர் புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, இரண்டாவது, "செட்" சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.
              மூன்றாவது, "செட்" சீருடை தீபாவளிக்கும், நான்காவது, "செட்" சீருடை, குடியரசு தின விழாவிற்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.
                  இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இம்முறை தரமான சீருடை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு, "செட்" சீருடைக்கு, 300 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இரண்டாவது, "செட்" சீருடை வினியோகம், அடுத்த வாரம் துவங்க உள்ளது.
               அனைத்து மாணவ, மாணவியருக்கும், உடனடியாக சீருடை கிடைக்க ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Thursday, July 18, 2013

இன்ஸ்பயர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் "இன்ஸ்பயர்" விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக, "இன்ஸ்பயர்" புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதை வழங்குகிறது.

பள்ளிக்கல்வி - EMIS கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகளை பதிவு செய்ய கோருதல்

CCE - E-Register for CCE for I to IX Std   

அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களுக்கு,
1 - 9  ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் E-Register for CCE எனப்படும் Excel file வெளியிடப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் போதுமானது. மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படும்.
2. ஒவ்வொரு பருவத்தின் இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
3. மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வருடம் முதலானவற்றை ஒரு பக்கத்தில் டைப் செய்தால் மட்டும் போதுமானது. மாணவர்களைச் சேர்க்கவும், நீக்கவும் வசதி உண்டு.
4. ஒட்டு மொத்த விபரங்களையும் ஒரு பட்டனைக் கிளிக் செய்து பிரிண்ட எடுக்க இயலும்.
5. முப்பருவ மதிப்பெண்களையும் கூட்டி சராசரி கண்டு ஆண்டு இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
6. ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் அம்மாணவன் பெற்ற பாட வாரியான மதிப்பெண் விழுக்காட்டையும், சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி விழுக்காட்டினையும் அறிய முடியும்.

To Download CCE - 9th Std Tamil Medium Click Here...

To Download CCE -9th Std - English Medium Click Here...

To Download CCE -1 to 8th std -Tamil Medium Click Here...